மாவட்ட செய்திகள்

தாமிரபரணி வெள்ளத்தில் சேதம்: 36 கூட்டுக்குடிநீர் திட்ட உறைகிணறுகள் சீரமைப்பு

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சேதம் அடைந்த 36 கூட்டு குடிநீர் திட்ட உறைகிணறுகள் சீரமைக்கப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்த கன மழையால் தாமிரபரணி ஆற்றில் கடந்த 13-ந் தேதி பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கிய 46 கூட்டு குடிநீர் திட்ட உறைகிணறுகள், குழாய்கள் சேதம் அடைந்து, குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

இந்த 46 கூட்டு குடிநீர் திட்டங்களின் சேதங்களை மதிப்பீடு செய்து உடனடியாக சரி செய்து, பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனரால் 120 பொறியியல் வல்லுனர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் 4 மாவட்டங்களிலும் நேரில் பார்வையிட்டு சீரமைப்பு பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இதனால் மிக குறுகிய காலத்துக்குள் 36 கூட்டு குடிநீர் திட்டங்கள் மீண்டும் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஓரிரு நாட்களில்...

மீதமுள்ள 10 கூட்டு குடிநீர் திட்டங்களையும் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் உத்தரவுப்படி, மதுரை தலைமை பொறியாளர் தலைமையில் அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணித்து பணிகள் விரைவில் முடிக்க தகுந்த ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். இதனால் இந்த பணிகள் அனைத்தும் ஓரிரு நாட்களில் முடிக்கப்பட்டு, அனைத்து கூட்டு குடிநீர் திட்டங்களும் பயன்பாட்டுக்கு வந்து விடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு