மாவட்ட செய்திகள்

மரம் விழுந்து வீடு சேதம்

கம்பத்தில் மரம் விழுந்து வீடு சேதமடைந்தது. அந்த வீட்டில் இருந்த மூதாட்டி உயிருடன் மீட்டனர்.

கம்பம்:

கம்பம்-சுருளிப்பட்டி செல்லும் சாலையோரம் இருபுறங்களிலும் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் சுருளிப்பட்டி சாலை பிரிவில் வ.உ.சி. திடல் அருகே சாலையோரம் இருந்த பழமையான வேப்ப மரம் ஒன்று திடீரென்று வேரோடு சாய்ந்து விழுந்தது. அதில் மீனம்மாள் (வயது 70) என்பவரது வீட்டின் மீது மரம் விழுந்ததால் வீடு முழுமையாக சேதமடைந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கி கிடந்த மீனம்மாளை அக்கம்பக்கத்தினர் பத்திரமாக மீட்டனர். அவர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினா. மேலும் மரத்தின் கிளைகள் விழுந்ததில் 2 வீடுகள் மற்றும் மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால் மின்சாரம் தடைபட்டது. தகவலறிந்த கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் நகராட்சி பணியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஊழியர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்