மாவட்ட செய்திகள்

கண்மாயில் செத்து கிடந்த மீன்கள்

போடி அருகே உள்ள கண்மாயில் மீன்கள் செத்து கிடப்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போடி:

போடி அருகே மீனாட்சிபுரம் கண்மாய் உள்ளது. மீன்வளத்துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள இந்த கண்மாயில் போதிய பருவமழை பெய்யாத காரணத்தால் நீர் இருப்பு குறைந்து காணப்படுகிறது. இதனால் தற்போது மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று கண்மாயில் உள்ள மீன்கள் கரையோரம் மற்றும் தண்ணீரில் செத்து கிடக்கின்றன. இதற்கான காரணம் தெரியவில்லை. கண்மாய் பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மீனாட்சிபுரம், விசுவாசபுரம், அம்மாபட்டி பகுதிகளில் வசிக்கும் மக்ககளுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே கண்மாயில் இறந்து கிடக்கும் மீன்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம், சுகாதார துறை மற்றும் மீன்வளத்துறை ஆகியவை ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்