மாவட்ட செய்திகள்

பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

நிலக்கோட்டை அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சித்தர்கள் நத்தத்தை சேர்ந்தவர் பூம்பாண்டி (வயது 35).

இவர் அணைப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.

சம்பவத்தன்று அணைப்பட்டி ஆற்றுப் பாலம் அருகே மீன்பிடித்தார்.

பின்னர் அந்த பாலத்தின் தடுப்புச்சுவரின் மீது பூம்பாண்டி படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது பாலத்தில் இருந்து அவர் தவறி விழுந்தார்.

இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்பு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி பூம்பாண்டி நேற்று முன்தினம் இறந்தார்.

இதுகுறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு