மாவட்ட செய்திகள்

“குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு” - புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசாக 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல் மந்திரி ரங்கசாமி, கூட்டுறவு பால் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று 7,000 ரூபாயாக இருக்கும் தற்காலிக பணியாளர்களின் ஊதியம், 15,000 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

தீபாவளியை முன்னிட்டு இலவசமாக வழங்கப்படும் வேட்டி, சேலைக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் 500 ரூபாய் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் அரசு மற்றும் காவல்துறையில் காலியாக உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு