மாவட்ட செய்திகள்

டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு நீர்மட்டம் 82.13 அடியாக குறைந்தது

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் 82.13 அடியாக குறைந்தது.

தினத்தந்தி

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த சில நாட்களாக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த நிலையில் காவிரி டெல்டா பாசன பகுதியில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கால்வாய் மற்றும் டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 11 ஆயிரத்து 300 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு 117 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு பல மடங்கு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் மளமளவென குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் நீர்மட்டம் 82.83 அடியாக இருந்தது. நேற்று காலை 82.13 அடியாக குறைந்தது.

நீர்மட்டம் வேகமாக குறைந்து கொண்டே வருவதால் தண்ணீர் நிறைந்து இருந்த 16 கண் மதகு பகுதியில் தற்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி பாறைகளாக காட்சி அளிக்கிறது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை