மாவட்ட செய்திகள்

கூத்தாநல்லூர் அருகே காடுவெட்டியில் சேதமடைந்த நீர்த்தேக்க தடுப்பணை சீரமைக்க கோரிக்கை

கூத்தாநல்லூர் அருகே காடுவெட்டியில் சேதமடைந்த நீர்த்தேக்க தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்க விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே உள்ள காடுவெட்டி என்ற இடத்தில், அப்பகுதி விவசாயிகள் பயன்பாட்டுக்காக வெண்ணாற்றின் குறுக்கே தண்ணீர் தேக்க தடுப்பணை கட்டப்பட்டது. இதன் மூலம் தடுப்பணை அருகே உள்ள நாகங்குடி பாசன வாய்க்கால் மூலம் அப்பகுதி விவசாயிகள், தங்களது விளை நிலங்களுக்கு தேவையான தண்ணீரை கொண்டு சென்று சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக காடுவெட்டியில் வெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்த்தேக்க தடுப்பணை பழுதடைந்து இடிந்த நிலையில் உள்ளது.

சீரமைக்க கோரிக்கை

இதனால் தேவையான அளவு தண்ணீர் தேங்கி நிற்காமல் சென்று விடுகிறது. மேலும் குறைந்த அளவு தண்ணீர் தேங்கி பாசன வாய்க்கால் மூலம் போதுமான தண்ணீரை விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், தடுப்பணை பழுதடைந்து உள்ளதால், கோடை காலத்தில் வழக்கமாக தேங்கி நிற்கும் தண்ணீர் கூட காடுவெட்டி பகுதியில் ஆற்றில் தேங்கி நிற்பதில்லை. எனவே, பழுதடைந்த காடுவெட்டி நீர்த்தேக்க தடுப்பணையை சீரமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு