மாவட்ட செய்திகள்

பூரண மதுவிலக்கு கோரி 15-ந்தேதி சென்னையில் உண்ணாவிரதம்: குமரி அனந்தன் பேட்டி

பூரண மதுவிலக்கு கோரி அடுத்த மாதம் 15-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காந்திய பேரவை இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என குமரி அனந்தன் தெரிவித்தார்.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

காந்திய பேரவை இயக்க தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குமரி அனந்தன் நேற்று காஞ்சீபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடத்துக்கு வந்தார். அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15-ந்தேதி அன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அறிவிக்க கோரி காந்திய பேரவை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

தமிழக முதல்- அமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா, திருக்குறளின் வழிகாட்டுதல்படியும், அப்போதைய எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். ஆனால் தற்போது அவரது பெயரை கொண்ட தமிழகத்தை ஆளும் கட்சி, வீதிகள் தோறும் மதுக்கடைகளை திறந்து மக்களை சீரழித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு