மாவட்ட செய்திகள்

குளச்சல் அருகே, ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு காதல் மனைவி சித்ரவதை - கணவர் உள்பட 8 பேர் மீது வழக்கு

குளச்சல் அருகே ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு காதல் மனைவி சித்ரவதை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவர் உள்பட குடும்பத்தினர் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

குளச்சல்,

நாகர்கோவில் அருகேஆசாரிபள்ளம் ஆளுர் தோப்புவிளையைச் சேர்ந்த செம்புலிங்கம் மகன் பால்ராஜ். அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வேன் டிரைவராக உள்ளார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தின் போது ரூ.6 லட்சம், 55 பவுன் நகைகள் மற்றும் 3 லட்சம் வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை சீதனமாக கொடுக்கப்பட்டது. திருமணத்துக்கு பிறகு கணவன் -மனைவி இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இதற்கிடையே மஞ்சு 2-வதாக கர்ப்பம் ஆனார். அப்போது கூடுதல் வரதட்சணை கேட்டு மஞ்சுவை, பால்ராஜ் குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இதில் மஞ்சுவின் கர்ப்பம் கலைந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. மகளிர் போலீசார் கணவன்- மனைவி இருவரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே பால்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மஞ்சுவிடம், கூடுதலாக ரூ.10 லட்சம் வரதட்சணை வேண்டும் இல்லை என்றால் மஞ்சுவின் பெற்றோரின் சொத்தில் பங்கு வேண்டும் என்று கூறி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தீ வைத்து எரித்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.இதுகுறித்து மஞ்சு இரணியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதன்பிறகு ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக மஞ்சுவின் கணவர் பால்ராஜ், அவருடைய தந்தை செம்புலிங்கம், தாயார் முருகேசுவரி மற்றும் மல்லிகா, கண்ணன், மணிகண்டன், லட்சுமி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி விசாரணை நடத்தி வருகிறார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு