மாவட்ட செய்திகள்

வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் - விக்கிரமராஜா பேட்டி

வணிகர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.

தினத்தந்தி

திண்டுக்கல்,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசு சட்டம் கொண்டு வந்தது. ஆனால், ஆய்வு என்ற பெயரில் தடை செய்யாத பிளாஸ்டிக் பொருட்களையும் அதிகாரிகள் அள்ளி செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு அபராதம் விதித்தால் எதிர்த்து போராடும் நிலைக்கு வணிகர்கள் உள்ளனர்.

தமிழக அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வணிகர்களை அழைத்து பேசி சட்டத்தை கொண்டு வந்திருக்க வேண்டும். மேலும் பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளான ஷாம்பு, பிஸ்கெட் பாக்கெட், சிகரெட் பாக்கெட் உள்பட பல பொருட்கள் பிளாஸ்டிக் பாக்கெட்டில் உள்ளது. ஆனால், சாமானிய வணிகர்களை முடக்கும் வகையில் அரசு செயல்படுகிறது.

நகராட்சி, உள்ளாட்சி மற்றும் அறநிலையத்துறை கடைகளுக்கு வாடகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை முறைப்படுத்த வேண்டும். எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் புறக்கணித்தால் தமிழ்நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் நடத்துவோம். பாலித்தீன் பைகளை உற்பத்தி செய்வது யார்? என்பது அரசுக்கு நன்றாக தெரியும். ஆனால், உற்பத்தியை முடக்காமல், வணிகர்களை மிரட்டி பணம் பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது