மாவட்ட செய்திகள்

டெங்கு கொசு உற்பத்தி 3 தனியார் நிறுவனங்களுக்கு அபராதம்

டெங்கு கொசு உற்பத்தி கண்டறியப்பட்டதால் காஞ்சீபுரம் அருகே 3 தனியார் நிறுவனங்களுக்கு கலெக்டர் பொன்னையா ரூ.3 லட்சம் அபராதம் விதித்தார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில், டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க பல்வேறு நிறுவனங்களில் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதையொட்டி, காஞ்சீ புரத்தை அடுத்த கீழம்பி ஊராட்சிக்குட்பட்ட ஒரு தனியார் நிறுவனத்துக்கும், திம்மசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு தனியார் பால் நிறுவனத்திற்கும், மேலும் ஒரு தனியார் நிறுவனத்தில் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு டெங்கு கொசு உற்பத்தியாவதை கண்டறிந்தார். முதல் முறை என்பதால், அந்த 3 தனியார் நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு தலா ரூ.1 லட்சம் என ரூ.3 லட்சம் அபராதம் விதித்தார்.

அடுத்த ஆய்வின் போது டெங்கு கொசு உற்பத்தி கண்டறியப்பட்டால் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், மேற்படி நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு