மாவட்ட செய்திகள்

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தினத்தந்தி

பழனி,

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்கியதாலும், இ-பாஸ் தேவையில்லாததாலும் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கார், வேன்களில் வருவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று வாரவிடுமுறை என்பதால் பக்தர்கள் வருகை அதிகரித்தது.

அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான படிப்பாதை, யானைப்பாதை ஆகிய இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதேபோல் திருஆவினன்குடி கோவிலிலும் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.

பக்தர்கள் கூட்டம்

இந்நிலையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்கள் வாகனங்களில் கிழக்கு கிரிவீதி, மேற்கு கிரிவீதி அருகே உள்ள பஸ்நிலையங்களில் வாகனங் களை நிறுத்தினர். இதனால் அங்கு பஸ்கள், வேன்கள் நிரம்பி காணப்பட்டன.

வாகனங்களின் வருகை அதிகம் இருந்ததால் பூங்காரோடு, அடிவாரம் ரோடு, பஸ்நிலைய பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழனி மலைக்கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு பணியில் போலீசார் அதிகளவில் ஈடுபட்டு இருந்தனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்