முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி 
மாவட்ட செய்திகள்

தர்மேகவுடா சாவு, அரசியல் கொலை: குமாரசாமி பேட்டி

தர்மேகவுடா சாவு, அரசியல் கொலை என்று குமாரசாமி கூறினார்.

கர்நாடக மேல்-சபை துணைத்தலைவர் தர்மேகவுடா தற்கொலை குறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அழுத்தம் கொடுத்து...

மேல்-சபை துணைத்தலைவர் தர்மேகவுடா சாவு, வெறும் மரணம் அல்ல. அது இன்றைய அரசியல் கொலை. எங்களை போன்ற அரசியல்வாதிகளின் சுயநலத்திற்காக ஒரு எளிமையான அரசியல்வாதி பலியாகியுள்ளார். இன்றைய அரசியல்வாதிகள் அனைவரும் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தர்மேகவுடாவை மந்திரியாக பார்க்க வேண்டும் என்று அவரது தந்தை என்னிடம் கூறினார்.

அவரை மந்திரியாக்க முடியவில்லை. அவரை எம்.எல்.சி. ஆக்கி மேல்-சபை துணைத்தலைவர் ஆக்கினேன். அதுவே அவரது சாவுக்கு காரணமாகிவிட்டதா?. மேலவை தலைவர் இருக்கையில் அமர தர்மேகவுடா ஒப்புக்கொள்ளவில்லை. நானும் வேண்டாம் என்று தான் கூறினேன். ஆயினும் அழுத்தம் கொடுத்து அவரை அந்த இருக்கையில் அமர வைத்தனர்.

அனைவருக்கும் தெரியும்

முழு மனது இல்லாமல் தான் மேலவை தலைவர் இருக்கையில் அமர்ந்தார். அதன் பிறகு மேல்-சபையில் நடந்த சம்பவம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். எங்களின் சுயநலத்திற்காக இந்த சம்பவம் நடந்துள்ளது.

வரும் நாட்களில் யாரும் இத்தகைய ஆட்டத்தை ஆடக்கூடாது. மேல்-சபையில் நடந்த சம்பவத்தால் அவர் மனம் நொந்துபோய் இருந்தார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவில்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு