மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு இலவச வீட்டுமனை கேட்டு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

திண்டுக்கல்,

திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யூ. தோல் பதனிடும் தொழிலாளர்கள் சங்க செயலாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.கணேசன், நகர செயலாளர் ஆசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். அதற்காக பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பட்டா வழங்கியவர்களுக்கு நிலங் களை அளந்து கொடுக்க வேண்டும். இதேபோல் சவேரியார்பாளையம், ஜீவாநகர், நேருஜிநகர், சகாயமாதாபுரம், அசனாத்புரம் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை