தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு நாளை (புதன்கிழமை) தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, நேற்று மாலையில் விசைப்படகு மீனவர்கள், முத்துக்குளிப்பவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்தில், நாளை (புதன்கிழமை) நடக்கும் நிகழ்ச்சிகளில் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான் ஜித்சிங் கலோன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் வேதரத்தினம், பொன்ராமு, தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.