மாவட்ட செய்திகள்

அடுத்த வாரம் கொண்டாட்டம்: தீபாவளி விற்பனை களைகட்டியது புத்தாடை வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் புத்தாடை வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை,

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இன்னும் ஒரு வாரமே இருப்பதால், தீபாவளி கொண்டாட்டத்துக்கு மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். தீபாவளி தினத்தன்று புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். புத்தாடை எடுப்பதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

அந்தவகையில் விடுமுறை நாளான நேற்று புத்தாடைகள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். இதனால் நகரத்து வீதிகளில் வழக்கத்தை காட்டிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக சென்னை தியாகராயநகர், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், திருவான்மியூர், புரசைவாக்கம் உள்ளிட்ட துணிக்கடைகள் சூழ்ந்த பகுதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. தீபாவளியையொட்டி ஒவ்வொரு கடையும் சலுகைகளை அறிவித்ததால் எல்லா கடைகளிலும் ஓரளவு கூட்டம் இருந்தது. நகைக்கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது.

புத்தாடை மட்டுமின்றி மின்சாதன பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள் வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டினார்கள். கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டியதால் நகரில் நேற்று பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக கோடம்பாக்கம், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், பாரிமுனை, தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று அவதிப்பட்டனர். மேலும் பஸ்களிலும், மின்சார ரெயில்களிலும் கூட்டம் அலைமோதியது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு