ராமநாதபுரம்
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில விவசாய அணி துணை செயலாளர் கோதைமாரியப்பன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர்கள் ராமநாதபுரம் தெற்கு சிங்கை ஜின்னா, வடக்கு முருகநாதன், மாவட்ட பொருளாளர் தர்மராஜ், மாவட்ட நிர்வாகி ராம்கி, மாவட்ட அவை தலைவர் குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்ததால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் சாலை மறியலுக்கு முயன்ற தே.மு.தி.க.வினர் 72 பேரை போலீசார் கைதுசெய்தனர்.