எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைதாகி விடுதலை செய்யப்பட்ட நாகப்பட்டினம், காரைக்கால், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த தமிழக மீனவர்கள் 33 பேரில் 29 பேர் காழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். 4 மீனவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். சென்னை விமான நிலையம் வந்த மீனவாகளை, தமிழக அரசு சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் தமிழக அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் மீனவாகளை நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன் தலைமையில் தி.மு.க.வினரும், பா.ஜ.க. மீனவா அணி தலைவர் சதீஷ்குமார் தலைமையில் பா.ஜ.க.வினரும் போட்டி போட்டு சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தங்கள் கட்சி தலைவாகளை வாழ்த்தியும் கோஷமிட்டதால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.