மாவட்ட செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து தி.மு.க. கவுன்சிலர் சாவு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து தி.மு.க. கவுன்சிலர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தினத்தந்தி

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள நொனங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் (வயது 45). தி.மு.க.வை சேர்ந்த இவர் தர்மபுரி மாவட்ட ஊராட்சி கவுன்சிலராக இருந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும் சந்துரு, முல்லைவேந்தன், அருள்மணி ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.

தாமரைச்செல்வன் நேற்று காலை காளிப்பேட்டை பகுதியில் உள்ள தனது நண்பர் சக்திவேலின் விவசாய நிலத்திற்கு சென்றார். அங்குள்ள 75 அடி ஆழ கிணற்றின் அருகே அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதைப் பார்த்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி அவரை மீட்க முயன்றனர்.

ஆனால் கிணற்றில் தவறி விழுந்ததில் படுகாயமடைந்த தாமரைச்செல்வன் இறந்து விட்டது தெரியவந்தது. இதுபற்றி பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாமரைச்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிணற்றில் தவறி விழுந்து மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது