மாவட்ட செய்திகள்

மோடியை பற்றி தவறாக விமர்சிப்பதா? உபேந்திராவுக்கு எதிராக சட்ட போராட்டம்

உபேந்திராவுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தப்படும் என்று ஷோபா எம்.பி. கூறினார்.

பெங்களூரு,

நடிகர் உபேந்திரா புதிய கட்சியை தொடங்கி இருப்பது குறித்து பா.ஜனதா பொதுச் செயலாளர் ஷோபா எம்.பி. பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

திரைத்துறையில் நடிகர் உபேந்திரா ஒரு நடிகராக வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அரசியல் கட்சி தொடங்கிய முதல் நாளிலேயே அவர் தவறு செய்துள்ளார். அவர் நடித்த ஒரு பாடல் வரிகளை கொண்டு மோடியை பற்றி தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர். இதை பா.ஜனதா ஒப்புக்கொள்ளாது. இது சரியல்ல. இதற்கு எதிராக நாங்கள் சட்ட போராட்டம் நடத்துவோம்.

மோடி ஒரு பெரிய தலைவர். உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் சக்தி படைத்தவர். அவரை தரக்குறைவாக விமர்சிப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். ஜனநாயகத்தில் கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது.

இவ்வாறு ஷோபா கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்