மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர்,

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்கான நோக்கத்துடன் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரால் திருச்செந்தூரில் கடந்த 1995-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது புதுடெல்லியின் தேசிய அங்கீகார வாரியத்தின் (சி.எஸ்.இ., இ.இ.இ., ஐ.டி.) அங்கீகாரம் பெற்றது. இக்கல்லூரியானது ஐ.எஸ்.ஓ. 9001:2015 டி.யு.வி.ன் சான்றளிக்கப்பட்ட நிறுவனம் ஆகும். மேலும் டி.சி.எஸ்., ஐ.இ. (ஐ) அங்கீகாரம் பெற்றது. தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி துறை, இக்கல்லூரிக்கு அறிவியல் ஆய்வுத்துறைக்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.

கல்லூரியில் 6 துறைகளில் இளநிலை பட்டப்படிப்பும், முதுநிலை பட்டப்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது. கணினி அறிவியல் பொறியியல் துறை, மின்னணு தகவல் தொடர்பு பொறியியல் துறை அண்ணா பல்கலைக்கழகத்தால் ஆராய்ச்சி மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்கு 30-க்கு மேற்பட்ட முனைவர் பட்டம் பெற்ற அர்ப்பணிப்பு, அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

முதலாம் ஆண்டு மாணவர்களை நட்பு சூழ்நிலையில் வரவேற்பதற்கும், அவர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும், இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கான பிரஷர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. கல்லூரி நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 24-ந்தேதி சிவந்தி கலை விழா நடத்தப்படுகிறது. பள்ளி மாணவர்களின் திறன்களை வளர்க்கும் வகையில், சிவந்தி வினாடி-வினா போட்டி ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 14-ந்தேதி நடத்தப்படுகிறது.

பள்ளி, பாலிடெக்னிக் மாணவர்களின் அறிவு மற்றும் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்துவதற்காக மாநில அளவிலான திட்ட எக்ஸ்போ மற்றும் திறமை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் இன்ட்ரா கல்லூரி திட்ட எக்ஸ்போ, ஒவ்வொரு துறையிலும் தேசிய அளவிலான மாணவர்களின் தொழில்நுட்ப கருத்தரங்கம் சாகோசியம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தொழில்நுட்ப சங்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு துறையும் தொழில்சார்ந்த படிப்புகள், தொழில்நுட்ப விரிவுரைகள், திட்டங்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கேட் பயிற்சி ஆகியவற்றை ஏற்பாடு செய்கின்றன.

சிவில் என்ஜினீயரிங் துறையின் ஸ்கேல் அமைப்பு மூலம் பென்சில் கலை, சுவரொட்டி வழங்கல், மாதிரி தயாரித்தல், குறியீடு கிராக்கிங், தொழில்நுட்ப வினாடி-வினா, தொழில்நுட்ப வார்த்தை, பத்திரிகை போட்டிகள் நடத்தப்படுகிறது. ஐ.சி.ஐ. மாணவர் அமைப்பு தொழில்நுட்ப கருத்தரங்கம், பென்சில் கலை, புகைப்படம் எடுத்தல், காகித விளக்க காட்சி, இணைப்பு போட்டிகளை ஏற்பாடு செய்கிறது.

மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையின் மாஸ் அமைப்பு மூலம் தொழில்நுட்ப விரிவுரைகள், கவி திடல், தனி நபர் நடனம், வணிக திட்ட போட்டிகளை ஏற்பாடு செய்கிறது. ஐ.இ. (ஐ) மெக்கானிக்கல் அமைப்பு மற்றும் சொசைட்டி ஆப் ஆட்டோமோட்டிவ் என்ஜினீயர்ஸ், ஐ.எஸ்.டி.இ. மாணவர்களின் அத்தியாயம் விரிவுரைகளை ஏற்பாடு செய்கிறது.

ஐ.எஸ்.டி.இ. மாணவர்கள் அமைப்பு கண்தானம், ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு திட்டம், தொழில்நுட்ப கருத்தரங்கம், கலைப்போட்டி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கிளப் போட்டிகளை ஏற்பாடு செய்கிறது. பேனர் வடிவமைத்தல், விளக்க காட்சி, குறியீட்டு முறை, திறனாய்வு தேர்வு, மெஹந்தி போட்டிகளை சி.எஸ்.இ. துறையின் ஸ்கேன் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இதேபோன்று ஐ.எஸ்.டி.இ. மாணவர்களின் அமைப்பு, இ.சி.இ. துறையின் ஸ்பேஸ் அமைப்பு, இ.இ.இ. துறையின் ஈஸ் அமைப்பு, மேலாண்மை துறையின் ஷேர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் மூலமும் தொழில்நுட்ப கருத்தரங்கம், வேலைவாய்ப்பு பயிற்சி போன்றவை நடத்தப்படுகிறது.

இலக்கிய மற்றும் விவாத சங்கம் (எல்.டி.எஸ்) மற்றும் நுண்கலை கழகத்தின் மூலம் ஆங்கிலம் மற்றும் தமிழ் பேச்சு போட்டி, கட்டுரை எழுதுதல் மற்றும் குழு பாடல் போன்ற பல்வேறு இலக்கிய நடவடிக்கைகள் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

கல்லூரி மாணவர்கள் பல்வேறு மாநாடுகளில் பங்கேற்று, தொழில்நுட்ப ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்து பல பரிசுகளை வென்றனர். மேலும் அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளனர். கல்லூரியில் மாணவர்களுக்கு 2 விடுதிகளும், மாணவிகளுக்கு ஒரு விடுதியும் நவீன வசதிகளுடன் உள்ளன. கல்லூரி விடுதி வளாகம் முழுவதும் வைபை கணிப்பொறி சேவை வசதி கொண்டுள்ளது. கல்லூரியில் இருந்து பல்வேறு ஊர்களில் இருந்தும் மாணவ-மாணவிகளை அழைத்து வர 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் 2020-21-ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் www.drsacoe.org என்ற இணையதளத்தில் பார்வையிட்டு, ஆன்-லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம். மேலும் படிப்புகள் குறித்த விவரங்களை பெற drsacoe@aei.edu.in, princyengg@aei.edu.in ஆகிய மின்னஞ்சல்கள் வாயிலாகவும், அல்லது முதல்வரை நேரிலோ அல்லது 04639 -220715, 220702, 220700, 94432 46150 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்