மாவட்ட செய்திகள்

மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை

திருவள்ளூர் அருகே ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை மதுகுடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் விபரீத முடிவு எடுத்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பூங்கா நகர் ஆவாரம்பூ தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 41). ஆட்டோ டிரைவர். இவருக்கு லதா(40) என்ற மனைவியும், பிரபாகரன்(15) என்ற மகனும், கோபிகா (13) என்ற மகளும் உள்ளனர்.

குடிப்பழக்கம் உள்ள செந்தில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். மேலும் அவர் தனது மனைவி லதாவிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

கடந்த 18-ந்தேதி செந்தில் குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்தார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த செந்தில் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் செந்தில் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்