மாவட்ட செய்திகள்

மதுகுடிப்பதை மகள் கண்டித்ததால் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை

வேலைக்கு செல்லும்போது மதுகுடிக்க மகள் சிவகலாவிடம் பணம் கேட்டார். அதற்கு அவர் பணம் கொடுக்காமல் கண்டித்ததாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

மூலக்குளம்,

புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 60). ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஒரு கார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி இறந்துவிட்டதால் மகள் சிவகலாவுடன் வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு கலியபெருமாள் வேலைக்கு செல்லும்போது மதுகுடிக்க மகள் சிவகலாவிடம் பணம் கேட்டார். அதற்கு அவர் பணம் கொடுக்காமல் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கலியபெருமாள் கார் கம்பெனி அலுவலகத்திற்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்றுகாலை கம்பெனி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது கலியபெருமாள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கலியபெருமாளை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கலியபெருமாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை