மாவட்ட செய்திகள்

விமான நிலையத்தில் குடிபோதையில் பெண்ணை மானபங்கம் செய்த கேரள வாலிபர் கைது

மும்பை விமான நிலையத்தில் குடிபோதையில் பெண்ணை மானபங்கம் செய்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

மும்பை,

மும்பை உள்நாட்டு விமானநிலைய பார்க்கிங் பகுதியில் சம்பவத்தன்று நள்ளிரவு 12 மணியளவில் 31 வயது பெண் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பெண் மீது பாய்ந்து மானபங்கம் செய்தார்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த பாதுகாப்பு படை வீரர் வாலிபரை பிடித்து விமானநிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார்.

விசாரணையில், பிடிபட்ட வாலிபர் கேரளாவை சேர்ந்த சஜிஸ் (34) என்பது தெரியவந்தது. சவுதி அரேபியாவில் இருந்து மும்பை வந்த அவர், கேரளா செல்ல இருந்த போது, குடிபோதையில் பெண்ணை மானபங்கம் செய்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த விமானநிலைய போலீசார் சஜிசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை