மாவட்ட செய்திகள்

வரி ஏய்ப்பு புகார் எதிரொலி தனியார் கல்வி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக தனியார் கல்வி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

தினத்தந்தி

பெரம்பலூர்,

பெரம்பலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் கல்வி குழுமம் சார்பில் திருச்சி, கோவை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங் களில் பள்ளி, கல்லூரிகள், ஓட்டல்கள், சீட்டு நிறுவனம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்த குழுமத்தினர் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து வருமான வரித்துறையினர் தமிழகம் முழுவதும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அந்த நிறுவனத்தின் தலைவரின் வீடு, உறவினர்களது வீடுகள் உள்ளிட்ட இடங்களிலும் தொடர்ச்சியாக வருமான வரித்துறையினர் சோதனையை மேற்கொண்டனர்.

அந்நிறுவன பள்ளி, கல்லூரிகள் மூலம் பெறப்படும் வருவாய் எவ்வளவு? என்பதை ஆய்வுசெய்து, அதற்கு முறையான வரி செலுத்தியதற்கான ஆவணங்கள் இருக்கிறதா? என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்தனர்.

இந்த சோதனையின் போது அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு வரை நீடித்த சோதனையின் முடிவில் சில முக்கிய ஆவணங்களை வரிமான வரித்துறையினர் எடுத்து சென்றதாக தெரிகிறது. ஆனால் அந்த ஆவணங்களின் நிலை குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது