மாவட்ட செய்திகள்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில்களுக்கான நடைமேடை படிக்கட்டுகள் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது

எழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில்களுக்கான நடைமேடை படிக்கட்டுகள் 3 நாட்களுக்கு மூடப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகளை ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பயணிகள் பயன்படுத்தும் நடைபாதைகளை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எழும்பூர் ரெயில் நிலையத்தின் மின்சார ரெயில்களுக்கான டிக்கெட் கவுண்ட்டர் பகுதியில் இருந்து மறுமுனைக்கு செல்வதற்கு நடைபாதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நடைபாதை பணியுடன் நடைமேடை படிக்கட்டுகளை இரு வழிப்பாதையாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து பணிகளை செய்து வருகிறது.

இதற்காக இன்று(வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த படிக்கட்டு பாதை மூடப்படும் என எழும்பூர் ரெயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

10, 11-வது நடைமேடையில் இயக்கப்படும் மின்சார ரெயில்களில் வரும் ஏராளமான பயணிகள் அந்த படிக்கட்டுகளை பயன்படுத்துவது வழக்கம். அந்த படிக்கட்டு பாதை மூடப்பட்டாலும் அதே பிளாட்பாரத்தில் கடைசியாக உள்ள படிக்கட்டுகள் வழியாக பயணிகள் வெளியேற வேண்டி இருக்கும். இதனால் பயணிகள் சிரமத்துக்குள்ளாவது மட்டும் அல்லாமல் அலைச்சலுக்கும் உள்ளாவார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது