மாவட்ட செய்திகள்

திருக்கழுக்குன்றம் அருகே முதியவர் அடித்துக்கொலை - உறவினர் கைது

திருக்கழுக்குன்றம் அருகே முதியவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக உறவினர் கைது செய்யப்பட்டார்.

திருக்கழுக்குன்றம்,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் இருளர் காலனியை சேர்ந்தவர் முத்து (வயது 65). இவரது மகன் ஏழுமலை (45). நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தந்தை, மகன் இருவரும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான ராஜி (55) என்பவர் தந்தை, மகன் இடையே நடந்த தகராறை தடுக்க முயன்றார். ஒரு கட்டத்தில் ராஜி அங்கிருந்த கட்டையை எடுத்து முத்துவின் தலையில் பலமாக அடித்தார். இதில் படுகாயம் அடைந்த முத்துவை அங்கு இருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்று விட்டு வீட்டில் விட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் படுக்கையில் இருந்து எழுந்திருக்காததால் அவரை தட்டி எழுப்பி பார்த்தனர். அப்போது முத்து இறந்து விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராஜியை கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்