மாவட்ட செய்திகள்

வாகனம் மோதி முதியவர் சாவு

ஆற்காடு அருகே வாகனம் மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த மேலகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). இவர், விஷாரத்தில் உள்ள மகள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பினார். ரத்தினகிரி அருகே தென்னந்தியலம் சோலையபுரம் பகுதியில் செல்லும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்