மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் கிருபாநிதி (வயது 20). ரவுடியான இவர், தனது நண்பரான ஓட்டேரியை சேர்ந்த பிரேம்குமார் (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கொன்னூர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சாலையாரம் நடந்து சென்ற முதியவர் மீது மோதினார். இதில் படுகாயமடைந்த முதியவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விபத்தில் இறந்தவர், ஒட்டேரி நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த சண்முகம் (61) என்பதும், பழ வியாபாரி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து குடித்து விட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்து விபத்து ஏற்படுத்தியதாக ரவுடி கிருபாநிதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு