ஏரியூர்,
டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததன் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த பகுதியில் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் இந்த கிராம மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.
இந்த நிலையில் மின்சார டிரான்ஸ்பார்மர் சீரமைக்கப்பட்டது. ஆனால் 2 மணிநேரத்தில் மீண்டும் பழுது ஏற்பட்டு மின் வினியோகம் தடைபட்டது.
இதனால் டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.