மாவட்ட செய்திகள்

பூந்தமல்லி அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சாவு

பூந்தமல்லி அருகே மின்வயரில் சிக்கிய காற்றாடியை எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்தான்.

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள கோவூர், பாபு கார்டன், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் ஹரிஸ் (வயது 14). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நண்பர்களுடன் சேர்ந்து காற்றாடி பறக்க விட்டுக்கொண்டு இருந்தான்.

அப்போது அந்த வழியே தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின்சார வயரில் காற்றாடி நூல் சிக்கியது. இதனால் ஹரிஸ் வயரில் சிக்கிய காற்றாடி நூலை எடுக்க முயன்றான். அப்போது ஹரிசை மின்சாரம் தாக்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த அவனது நண்பர் ஹரிசை காப்பாற்ற முயன்றார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மயங்கிய நிலையில் இருந்த ஹரிசை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஹரிஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனால் மின்சாரம் தாக்கிய ஹரிசின் நண்பர் எந்தவித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினார்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஹரிஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது.

இந்தப் பகுதியில் உள்ள காலி இடங்கள் மட்டுமின்றி குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் கூட உயர் அழுத்த மின்சார வயர்கள் மிகவும் தாழ்வாகவே உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் காலி இடங்கள் அனைத்திலும் மண் கொட்டி நிரப்பப்பட்டு வருவதால் தாழ்வான பகுதி மேடாக மாறி உள்ளது. இதனால் மின்சார வயர்கள் இன்னும் தாழ்வாக உள்ளது. இதுகுறித்து அந்த இடத்தின் உரிமையாளர்களும் மின்வாரிய அதிகாரிகளுக்கு உரிய தகவல் தெரிவிப்பது இல்லை.

அப்படி ஒருவேளை இதனை அறிந்தாலும் மின்வாரிய அதிகாரிகளும் இதனை கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். இந்த பகுதியில் மின்சார வயர்கள் அறுந்து விழுந்தாலோ, மின்சாரம் தடை பட்டாலோ மின்வாரிய ஊழியர்கள் உடனே வந்து பார்ப்பது இல்லை.

தற்போது மாணவர் உயிரிழப்புக்கு மின்வாரிய அதிகாரிகள் அலட்சியபோக்கே காரணம். இந்த நிலை நீடித்தால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்