விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர். சாமுவேல் ஜார்ஜ், சி.எஸ்.ஐ . ஆயர் செல்லையாவை சந்தித்து ஆசி 
மாவட்ட செய்திகள்

குமரி சி.எஸ்.ஐ. பேராயரை சந்தித்து ஆசி பெற்றார்; விளவங்கோடு தொகுதியில் தகுதியானவர்கள் வறுமைகோடு பட்டியலில் சேர்க்கப்படும்; வேட்பாளர் சாமுவேல் ஜார்ஜ் பிரசாரம்

விளவங்கோடு தொகுதியில் தகுதியான நபர்களை வறுமை கோடு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுயேச்சை வேட்பாளர் சாமுவேல் ஜார்ஜ் பிரசாரம் செய்தார்.

தினத்தந்தி

சுயேச்சை வேட்பாளர்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளராக டாக்டர். சாமுவேல் ஜார்ஜ் கலையரசர், கிரிக்கெட் மட்டை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் சி.எஸ்.ஐ. குமரி பேராயர் செல்லையாவை

சந்தித்து ஆசி பெற்றார். மேலும் நேற்று தொகுதிக்கு உட்பட்ட கழுவன்திட்டை, ஞாறான்விளை, மருதங்கோடு, மலையடி, வன்னியூர், தேவிகோடு, இடைக்கோடு, புலியூர்சாலை, மாங்காடு உட்பட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

விளவங்கோடு தொகுதியில் உள்ள விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினையை போக்க குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளபடும். முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வறுமை கோடு பட்டியல்

தகுதியான நபர்களை வறுமைக்கோடு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு கிரிக்கெட் மட்டை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு