மாவட்ட செய்திகள்

காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தினத்தந்தி

நாகப்பட்டினம்,

நாகையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அய்யம்மாள், மாவட்ட செயலாளர் ராஜூ, பொருளாளர் துர்க்காம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் நூர்ஜஹான் சங்க கொடியை ஏற்றி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்துவன்சேரல், செயலாளர் அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊதியக்குழு நிலுவைகளை உடன் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டம்

நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். தேசிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் காலியாக மாவட்ட இணை செயலாளர்களாக ராஜேந்திரன், மயிலாடுதுறை இளங்கோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட துணைத்தலைவர்கள், செயலாளர்கள், இணை செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் வாசுகி நன்றி கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு