மாவட்ட செய்திகள்

என்ஜினீயரிங் படிக்க முடியாத ஏக்கத்தில் மாணவி தற்கொலை

காஞ்சீபுரம் அருகே என்ஜினீயரிங் படிக்க முடியாத ஏக்கத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 19). இவர் காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். இவரது அண்ணன் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யாவுக்கு தன்னால் என்ஜினீயரிங் படிக்க முடியவில்லையே என்ற மன வருத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பி.காம். படிப்பில் கவனம் செலுத்தவில்லை. மன உளைச்சலில் இருந்த அவர் திடீரென்று வீட்டில் இருந்த மண்எண்ணெயை தன்னுடைய உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவியின் தற்கொலை குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு