மாவட்ட செய்திகள்

வீடு புகுந்து கத்தியால் குத்தி ஆட்டோ டிரைவரை கொலை செய்ய முயற்சி 2 பேர் கைது

சென்னை ஆயிரம்விளக்கு, வீடு புகுந்து கத்தியால் குத்தி ஆட்டோ டிரைவரை கொலை செய்ய முயற்சி 2 பேர் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை ஆயிரம்விளக்கு சுதந்திராநகர் குடிசைப்பகுதியை சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 39). ஆட்டோ டிரைவர். இவர், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் (22), குட்டி என்ற ஜோஷ்வா (22) ஆகிய 2 பேரை கண்டித்துள்ளார்.

இந்தநிலையில் அவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு மோகன்ராஜ் வீட்டுக்குள் புகுந்து அவரை கத்தியால் குத்தினர். பின்னர் அவரது வீட்டில் மதுபாட்டிலை வீசினர். இதில் மோகன் ராஜின் மகனுக்கு காயம் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மோகன்ராஜ் அளித்த புகாரின் பேரில், பார்த்திபன், ஜோஷ்வா ஆகிய 2 பேரை ஆயிரம்விளக்கு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பார்த்திபன் மீது எழும்பூர் போலீஸ்நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு