மாவட்ட செய்திகள்

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சார்பில் பங்குதாரர் குறைதீர்ப்பு முகாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சென்னை (தெற்கு) மண்டல கமிஷனர் பி.ஹன்ஸ்சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தினத்தந்தி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சென்னை (தெற்கு) மண்டலம் சார்பில் ஒவ்வொரு மாதமும் 10-ந் தேதி, வருங்கால வைப்பு நிதி சட்டப்படி சந்தாதாரர்களின் குறைகள் மற்றும் புகார்களுக்கு விரைவான தீர்வை எட்டும் வகையில் நிதி ஆப்கே நிகத் என்ற பெயரில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இம்மாதம் 10-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், இந்த மாதத்துக்கான முகாம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெறும். தீர்க்கப்படாத குறைகளைக் கொண்ட எந்தவொரு பங்குதாரர்களும் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு உரிய ஆவணங்களுடன் வந்து தீர்வை பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது