மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட முன்கள பணியாளர்கள் குவிந்ததால் பரபரப்பு

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தடுப்பூசி போட முன்கள பணியாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

கிணத்துக்கடவு

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தடுப்பூசி போட முன்கள பணியாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்கள பணியாளர்கள் குவிந்தனர்

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

சில இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறையாக இருப்பதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்று போட்டுச்செல்கிறார்கள்.

இந்த நிலையில் கிணத்துக்கடவுவில் உள்ள சமுதாயக்கூடத்தில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப் பட்டது. இதையடுத்து அங்கு ஏராளமானவர்கள் குவிந்தனர்.

அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக இடைவெளியுடன் நிற்க வைத்தனர்

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு வந்து முன்கள பணியாளர்கள் அனைவரையும் சமூக இடைவெளி விட்டு நிற்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப் பட்டது.

இதில் 352 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதுபோன்று இங்குள்ள நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் ஆகிய துணை சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

இங்கும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவர் களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

751 பேருக்கு தடுப்பூசி

இந்த பணிகளை நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அதிகாரி சித்ரா, சுகாதார ஆய்வாளர் குணசேகரன், வட்டார விரிவாக்க கல்வியாளர் ஜோதிமணி மற்றும் சுகாதார பணியாளர்கள் பார்வையிட்டனர்.

இது குறித்து சுகாதாரத்துறை கூறும்போது, கிணத்துக்கடவு பகுதியில்முன்கள பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என்று மொத்தம் 751 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என்றனர்.

வால்பாறையில் சிறப்பு முகாம்

வால்பாறை பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோர், பாதுகாவலர்களுக்கு தடுப்பூசி போட சிறப்பு முகாம் நடந்தது.

வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் வால்பாறை அனைவருக்கும் கல்வித்திட்ட ஆசியர்களும் இணைந்து இந்த சிறப்பு முகாமை நடத்தினார்கள்.

இதில் 66 பேர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மேலும் வால்பாறையை சேர்ந்தவர்கள் பலர் வெளிநாடுகளில் வேலை செய்து வருகிறார்கள்.

அவர்கள் தற்போது விடுமுறையில் வால் பாறைக்கு வந்து உள்ளனர். எனவே அவர்களுக்கும் தடுப்பூசி போட சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை