மாவட்ட செய்திகள்

வங்கிக்குள் கத்தியுடன் புகுந்த மர்ம நபர் கழிவறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டதால் பரபரப்பு

சீர்காழியில் வங்கிக்குள் கத்தியுடன் மர்மநபர் ஒருவர் புகுந்தார். அவர் வங்கி கழிவறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீர்காழி,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஒரு வங்கி உள்ளது. இந்த வங்கி நேற்று காலை திறக்கப்பட்டு வழக்கம் போல ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென வங்கிக்குள் கைலி, டீசர்ட் அணிந்த வாலிபர் ஒருவர் புகுந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அவரை உற்று நோக்கினர். அப்போது அந்த நபர் பணம் கட்டும் படிவத்தை எடுத்து நிரப்புவது போல நடித்தார்.

பின்னர் அவர் வங்கி ஊழியர்களுக்கு வைக்கப்பட்டிருந்த தேனீரை எடுத்து அருந்தினார். இதனால் அவரிடம் ஊழியர்கள் நீங்கள் யார்? ஏன் வங்கிக்கு வந்தீர்கள்? என கேட்டனர்.

கழிவறைக்குள் சென்றார்

உடனே அந்த நபர் வங்கியில் இருந்து ஓட்டம் பிடித்து வங்கி கழிவறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் கழிவறையின் கதவை தட்டினர். ஆனால் கழிவறைக்குள் சென்ற நபரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இது குறித்து சீர்காழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட வங்கிக்கு விரைந்து சென்று கழிவறையில் பதுங்கி இருந்த நபரை வெளியே வர கூறினர்.

விசாரணை

இதனால் அந்த நபர் கழிவறையை திறந்து வெளியே வந்தார். அப்போது அவர் கையில் கத்தி வைத்திருந்தார். அவரை போலீசார் சீர்காழி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நெய்விளக்கு பகுதியை சேர்ந்த கோபால் (வயது24) என தெரியவந்தது. மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்தது. அவர் திருடும் நோக்கத்தில் வங்கிக்குள் புகுந்தாரா? அல்லது என்ன காரணத்துக்காக வங்கிக்குள் புகுந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு