மாவட்ட செய்திகள்

‘சஜக்’ ஆபரே‌ஷன் என்ற பெயரில் குமரி கடலில் அதிநவீன படகுகள் மூலம் தீவிர கண்காணிப்பு

கன்னியாகுமரியில் நேற்று ‘சஜக்’ ஆபரே‌ஷன் ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஈடுபட்டனர். கடலில் அதிநவீன ரோந்து படகுகள் மூலம் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கவும், கடல் வழி பாதுகாப்பை உறுதிபடுத்தும் நோக்கத்துடன் அவ்வப்போது சஜக் ஆபரேஷன் ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கன்னியாகுமரியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலில் சஜக் ஆபரேஷன் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டமான ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும், கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் எல்லையான உவரி, கூடங்குளம் வரையும் தீவிர சோதனை நடத்தப்பட் டது. இதற்காக அதிநவீன ரோந்து படகுகள் மூலம் அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் அடையாள அட்டைகளையும் சோதனை செய்தனர். கடலில் சந்தேகப்படும் படியாக ஏதாவது படகுகள், கப்பல்கள் சென்றால் உடனே தகவல் தெரிவிக்குமாறு அவர்கள் மீனவர்களிடம் கேட்டுக் கொண்ட னர். மேலும், சின்னமுட்டம், மகாதானபுரம், தேங்கா பட்டணம், பஞ்சலிங்கபுரம் உள்பட கடலோர பாதுகாப்பு குழு போலீசாருக்கு சொந்தமான 11 சோதனை சாவடிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

கடற்கரையில் ஓடும் அதிநவீன ரோந்து வாகனம் மூலமும் கடற்கரை கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சஜக்ஆபரேஷன் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு