மாவட்ட செய்திகள்

போலி விசா, பாஸ்போர்ட்டுடன் தமிழகத்தை சேர்ந்தவர் கைது இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்

மும்பை விமான நிலையத்தில் போலி விசா, பாஸ்போர்ட்டுடன் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

தமிழ்நாட்டை சேர்ந்தவர் மதியன்(வயது40). இவர் கடந்த 2011-ம் ஆண்டு இங்கிலாந்து சென்றார். அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு அங்குள்ள தூதரகத்திற்கு சென்ற அவர், தனது பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக தெரிவித்தார்.

நாடு திரும்ப உள்ளதாக கூறிய அவருக்கு அதற்காக அவசர சான்றிதழ் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் அங்கிருந்து நாடு திரும்பவில்லை.

விசா காலம் முடிந்த பின்னரும் 2 ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்து வேலை செய்து வந்திருக்கிறார். இந்த விவரம் தெரியவந்ததையடுத்து அவரை பிடித்து அந்நாட்டு போலீசார் விசாரித்தனர்.

கைது

அப்போது அவரிடம் விசா மற்றும் பாஸ்போர்ட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். காணாமல் போன பாஸ்போர்ட் எப்படி கிடைத்தது என்பது பற்றி அவரிடம் விசாரித்து உள்ளனர். ஆனால் அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து மதியன் அதிரடியாக நாடு கடத்தப்பட்டார். மும்பை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்திறங்கிய போது, அவரது விசா மற்றும் பாஸ்போர்ட்டை குடிமைப்பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் இரண்டுமே போலியானவை என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் சகார் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரளாவை சேர்ந்தவர் கைது

இதுபோல நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து மும்பைக்கு வந்த தனியார் விமானத்தில் வந்திறங்கிய ஒருவரை சந்தேகத்தின்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது பாஸ்போர்ட் போலியானது என்பது தெரியவந்தது. விசாரணையில், அவர் கேரளாவை சேர்ந்த ஹோனப்பா பசப்பா என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர் சாகர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு