மாவட்ட செய்திகள்

விவசாயி சாவு

கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயி பலியானார்.

கம்பம்:

கம்பம் கோம்பை ரோட்டை சேர்ந்தவர் சிவசாமி (வயது 42). விவசாயி. இவர் நேற்று இரவு வீட்டுக்கு செல்வதற்கு கம்பம் -உத்தமபாளையம் புறவழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சீரடி சாலை பிரிவை கடந்து செல்ல முயன்றார். பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிவசாமி படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிவசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சியை சேர்ந்த கார் டிரைவர் சையது முஸ்தபா (37) என்பவரை கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்