மாவட்ட செய்திகள்

விவசாயி சாவு; 6 பேர் காயம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விவசாயி ஒருவர் பலியானார். இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.

தேனி:

ஆண்டிப்பட்டி அருகே புள்ளிமான்கோம்பையை அடுத்த நடுகோட்டையை சேர்ந்தவர் பாண்டி (வயது 51). விவசாயி.

நேற்று இவர், அவருடைய உறவினர் பொன்ராம் (40) சேர்ந்து பெரியகுளம் அருகிலுள்ள காமாட்சிபுரத்துக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளை பொன்ராம் ஓட்டினார்.

பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின் ரோடு நல்லகருப்பன்பட்டி பிரிவு அருகே வந்தபோது காமாட்சிபுரத்தை சேர்ந்த தினேஷ் குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தவறி விழுந்த பாண்டி தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த தினேஷ்குமார், அவருடன் வந்த தர்மலிங்கபுரத்தை சேர்ந்த சுமதி, பொன்ராம் உள்பட 6 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்