மாவட்ட செய்திகள்

விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று நடக்கிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்துக்கான கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. கூட்டத்துக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்குகிறார். இதில் தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.

எனவே விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவிக்கலாம். தனிநபர் குறைகளை மனுக்களாகவும் வழங்கலாம்.

இந்த தகவலை கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்