மாவட்ட செய்திகள்

தச்சூரில் இருந்து சித்தூருக்கு 6 வழிச்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

தச்சூரில் இருந்து சித்தூருக்கு 6 வழிச்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டம்

சென்னை அருகே தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 6 வழிச்சாலை அமைய உள்ளது. இதற்காக விளை நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா சானா குப்பம், திருமல ராஜு பேட்டை, பொன்னுமாகுலபட்டடை, இருதல வாரி பட்டடை, குமார ராஜு பேட்டை, பெருமாநல்லூர், கீளப்பூடி, மேளப்பூடி, சொரக்காய் பேட்டை, சாமந்த வாடா, புண்ணியம் ஆகிய 11 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் விளைநிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்த விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

எதிர்ப்பு

இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் 6 வழிச்சாலைக்காக விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த சில விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம் அரசின் இந்த திட்டத்திற்கு சில விவசாயிகள் ஆதரவு தெரிவித்து தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர். தங்களது இந்த கோரிக்கையை அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தி 16 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு இம்மாதம் 9-ந்தேதி திருவள்ளூர் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து தங்களின் கோரிக்கையை வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு