மாவட்ட செய்திகள்

தாம்பரம் பஸ் நிலையம் அருகே விவசாய சங்கத்தினர் போராட்டம்

தாம்பரம் பஸ் நிலையம் அருகே வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையை அடுத்த தாம்பரம் பஸ் நிலையம் அருகே, மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில் விவசாய சங்கத்தினர் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீசார், வேளாண் சட்ட நகல்களில் எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அப்போது மாநில பொதுச்செயலாளர் சண்முகம் கூறும்போது, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் கொரோனா பேரிடர் தனிந்த பிறகு அனைத்து விவசாயிகளையும் ஒன்று திரட்டி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்