மாவட்ட செய்திகள்

வேப்பூரில் மினிலாரி மோதி தந்தை, மகன் சாவு

வேப்பூரில் மினிலாரி மோதி தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

வேப்பூர்,

வேப்பூர் அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் அபுசாலி (வயது 30). இரவது மனைவி சரிபா (27). மகன் முகமது ரியாஸ்(8). அபுசாலி நேற்று முன்தினம் இரவு தனது மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் அடரியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வேப்பூர் கூட்டு ரோடு பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக அவர்களுக்கு பின்னால் வந்த மினிலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனளிக்காமல் அபுசாலி, முகமது ரியாஸ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சரிபாவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்