மாவட்ட செய்திகள்

தங்கும் விடுதியில் அழுகிய நிலையில் பெண் உடல்

கோவையில் உள்ள ஒரு தங்கும்விடுதியில் அழுகியநிலையில் பெண் உடல் மீட்கப்பட்டது. அந்த பிணத்துடன் 3 நாட்கள் இருந்த கள்ளக்காதலன் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

கோவை

கோவையில் உள்ள ஒரு தங்கும்விடுதியில் அழுகியநிலையில் பெண் உடல் மீட்கப்பட்டது. அந்த பிணத்துடன் 3 நாட்கள் இருந்த கள்ளக்காதலன் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

துர்நாற்றம் வீசியது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 5-வது வீதியில் உள்ள தங்கும் விடுதியுடன் கூடிய ஓட்டல் உள்ளது. இங்கு கடந்த 26-ந் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த முஸ்தபா (வயது 58) மற்றும் பிந்து (46) ஆகியோர் வந்தனர்.

பின்னர் அவர்கள் தங்களை கணவன்-மனைவி என்று கூறி அறை எடுத்தனர். அவர்களுக்கு விடுதியின் 3-வது மாடியில் அறை ஒதுக்கப்பட்டது. அந்த அறையில் இருந்து மதியம் கடும் துர்நாற்றம் வீசியது.

பெண் பிணம்

இதையடுத்து அங்கு இருந்த ஊழியர்கள் உள்பக்கமாக பூட்டி இருந்த அறையை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது அங்கு பிந்து உடல் அழுகிய நிலையில் இருந்தது. அந்த பிணத்தின் அருகே முஸ்தபா கழுத்து, கை, கால்களில் ரத்தக்காயத்துடன் இருந்தார். உடனே அவர்கள் இது குறித்து காட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் ரத்தக்காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த முஸ்தபாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

அத்துடன் அங்கு அழுகிய நிலையில் பிணமாக கிடந்த பிந்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:-

கள்ளக்காதல் ஜோடி

கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்துவுக்கு ஏற்கனவே திருமணமாகி வினோத் என்ற கணவர் உள்ளார். பிந்துவுக்கும், அதேப்பகுதியை சேர்ந்த முஸ்தபாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதனால் இந்த ஜோடியினர் கடந்த 26-ந் தேதி வீட்டைவிட்டு வெளியேறி கோவை வந்து கணவன்-மனைவி என்று கூறி அறை எடுத்து தங்கி உள்ளனர். ஆனால் பிந்து எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.

3 நாட்கள் பிணத்துடன் இருந்தார்

அவர் உடல் அழுகி இருப்பதால் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம். அந்த பிணத்துடன் முஸ்தபா மது அருந்திய படியே இருந்து உள்ளார். பிந்து கொல்லப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்தாரா என்பது தெரியவில்லை.

மேலும் அந்த அறையில் சோதனை செய்தபோது எலி மருந்து (விஷம்) இருந்தது. பிரேத பரிசோதனை முடிவில்தான் தெரியவரும்.

மேலும் தன்னை தானே மதுபாட்டில்களால் குத்தி தற்கொலை செய்ய முயற்சி செய்த முஸ்தபாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமான பின்னர்தான் முழு தகவலும் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு