மாவட்ட செய்திகள்

புதுச்சேரி சட்டப்பேரவை செயலகத்துக்கு நிதி அதிகாரம் - அரசாணை வெளியீடு

சட்டப்பேரவை செயலகத்துக்கான நிதி அதிகாரத்தினை 41 ஆண்டுகளுக்கு பிறகு பல முயற்சிகளுக்குப் பின் சபாநாயகர் செல்வம் அமல்படுத்தியுள்ளார்.

புதுச்சேரி,

மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 1981 ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டப்பேரவை செயலருக்கு நிதி அதிகாரங்களை பயன்படுத்துவதற்கான ஆணையை வழங்கியிருந்தது. ஆனால் இந்த ஆணை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இது சபாநாயகர் செல்வம் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. தலைமை செயலர், நிதி செயலர், சட்டத்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சட்டசபை செயலகத்துக்கு நிதி அதிகாரம் வழங்குவதற்காக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் இதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் ஒப்புதல் பெறப்பட்டு, இதற்கான அரசாணை கடந்த 13 ஆம் தேதி புதுச்சேரியில் வெளியிடப்பட்டுள்ளது. இனிமேல் புதுச்சேரி சட்டபேரவை செயலருக்கு நிதியை பயன்படுத்தும் அதிகாரம் வழங்கப்படும். இதனால் தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்படும். 41 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை செயலகத்துக்கான நிதி அதிகாரத்தினை பல்வேறு முயற்சிகளுக்கு பின் சபாநாயகர் செல்வம் அமல்படுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்