மாவட்ட செய்திகள்

பல்லடம் அருகே சாய ஆலையில் தீ விபத்து: ரூ.1½ கோடி எந்திரம் எரிந்து சேதம்

பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் தனியார் சாய ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் ரூ1½ கோடி மதிப்புள்ள எந்திரம் எரிந்து சேதமானது.

தினத்தந்தி

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் ஜி.எம்.எஸ்.பிராசஸ் என்ற தனியார் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சாயக்கழிவுகளை புதிய தொழில்நுட்பத்தில் ஜீரோ டிஸ்சார்ஜ் என்னும் முறையில் கழிவுகளின் ஈரத்தன்மையை அகற்றும் நவீன எந்திரம் ஜெர்மன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது.

இந்த எந்திரத்தின் சோதனை ஓட்டம் நேற்றுகாலை நடைபெற்றது. எந்திரத்தை இயக்கும் போது அதில் இருந்து ஆயில் சுழற்சி பகுதியிலிருந்து ஆயில் கசிவுந்துள்ளது.

இதனை கவனிக்காத பணியாளர்கள் எந்திரத்தை இயக்க முயன்றபோது அது திடீரென தீப்பிடித்து எரிந்தது. தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றபோது முடியவில்லை. இதையடுத்து பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

இந்த தீ விபத்தில் எந்திரத்தின் ஆயில் சர்க்குலேசன் பகுதி முழுவதும் தீயில் கருகியது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி என அந்த நிறுவன அதிகாரி தெரிவித்தார். இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு