மாவட்ட செய்திகள்

சத்தியமங்கலம் அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைக்கு தீ வைப்பு; வாகன ஓட்டிகள் அவதி

சத்தியமங்கலம் அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைக்கு தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலத்தில் இருந்து அத்தாணி செல்லும் ரோட்டில் எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் இரவு நேரங்களில் வாழை மட்டைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பல்வேறு குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன.

அவ்வாறு கொட்டப்படும் கழிவுகளில் பகல் நேரத்திலேயே மர்ம நபர்கள் தீ வைத்து விடுகின்றனர். இதனால் குப்பை கழிவுகள் தீப்பிடித்து எரிவதோடு புகை மண்டலமும் அந்த இடத்தில் உருவாகி விடுகிறது.

இதன்காரணமாக அந்த பகுதி வழியாக வாகனங்களில் செல்பவர்கள் எதிரே செல்லும் வாகனங்கள் தெரியாமல் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதுடன், மூச்சுத்திணறலுக்கும் உள்ளாகி அவதிப்படுகிறார்கள்.

எனவே சத்தியமங்கலம்- அத்தாணி சாலயோரம் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்